செய்திகள்

எழுக எழுகவே தமிழ் மண்ணே!

(1) எழுகவே தமிழ் எழுகவே தமிழ்
எழுக எம்மண் எழுகவே எம்மண்
கழுகுகள் கண்முன் எம்மைக் கொன்றது போதும்
எழுக தமிழ் அன்னையே! எழுகவே தமிழ் மண்ணே!

(2) தமிழினம் அழியாது எழுக எழுகவே
தாய்நிலம் ஒழியாது எழுக எழுகவே
தமிழே விழித்தெழ எழுக எழுகவே
தமிழே உயிர்த்தெழ எழுக எழுகவே

(3) அடிமையாய் வாழும் நிலை அகலவே எழுக எழுகவே
குடிமையாய் வாழும் நிலை ஒழியவே எழுக எழுகவே
பொறுமையாக இருந்தநிலை முடியவே எழுக எழுகவே
ஒற்றுமையாகக் குரல் கொடுப்போம் எழுக தமிழ் மண்ணே!

(4) அரசியலில் சமஉரிமை பெற்றிடவே எழுக எழுகவே
அடக்குமுறையின் உச்சத்தினை அகற்றியே எழுக எழுகவே
அகதியாக அலையும் வாழ்விற்கு முற்றிடல் எழுக எழுகவே
அழிந்த எம் பொருளியலை மீட்டிட எழுக தமிழ் மண்ணே!

(5) சுதந்திரத்தைக் கேட்டுப் பெற்றிட எழுக எழுகவே
சுதந்திரத்தைப் போராடிப் பெற்றிட எழுக எழுகவே
சுதந்திரத்தை அனுபவித்து அடைய எழுக எழுகவே
ஆறவில்லை நாம் நம்பிக்கை தளரவில்லை வீறுடன் எழுக எழுகவே
ஆறாகப் பெருகிடுவோம் தமிழராய் எழுக தமிழ் மண்ணே!

(6) தமிழுக்கோ இன அழிப்பு அது சிங்களத்திற்கு வெற்றிப்புளகாங்கிதம்!
ஓட ஓட குண்டு மழை கனரக ஆயுதங்களால் எம்மக்கள் மீது!
உண்ண உணவு இல்லை! அருந்த நீர் இல்லை! காயத்திற்கு மருந்து இல்லை!
சுவாசமோ கந்தகக் காற்றில்! – இவையே
சிங்களத்தின் வெற்றி – மானிடத்தின் தோல்வி இவற்றைக் கூறிட எழுகஎழுகவே!

(7) மிருகம் மனிதனாவான் மகாவம்சக்கதையில் அன்று
மனிதன் மிருகமாவான் முள்ளிவாய்க்காலில் நிஜத்தில் நேற்று
செஞ்சிலுவையின் மனச்சாட்சி ஐநாவின் மனச்சாட்சி
சேர்பியா, ருவாண்டா போல் தமிழ்நிலம் அழிந்ததை
வஞ்சகமாக மறைத்ததனை கூறிடவே எழுக தமிழ் மண்ணே!

(8) சித்திரவதை, கற்பழிப்பு, கொலை இவை யாவும்
பத்திரமாக அலைபேசியில் மகிழ்வுடன் பதித்த காமுகர்களின் வெற்றிப்புளகாங்கிதம்
நாடு கடத்தப்பட்ட வம்சத்திற்கு ஒரு நாடாம் – அது
நாடு வென்ற தமிழனுக்கு இடுகாடாம் என்றநிலைமாறிட எழுகவே தமிழ்மண்ணே!

(9) ஏமாற்றத்தை நாம் ஒருபோதும் ஏற்கோம் நல்லிணக்கம் என்று
நாற்பத்தெட்டில் அநாதையானோம் பிரஜா உரிமைச்சட்டத்தில்
ஐம்பத்தெட்டில் தொடங்கி, எழுபத்தெட்டு, எண்பத்திமூன்றில் அழிக்கப்பட்டு அநாதையானோம்
தமிழ் அழிவில் பயங்கரச் சட்டம்தனை உடைக்க எழுக தமிழ்மண்ணே!

(10) காட்டிக் கொடுப்புக்கள் எம்மிடையே இல்லாது எழுக எழுகவே
வீண்விதண்டா வாதங்கள் இல்லாது எழுக எழுகவே
ஏமாற்று வித்தைகள் கூறாது எழுக எழுகவே
பதவி ஆசைகள் மாற்றாது எழுக தமிழ் மண்ணே!

(11) நாம் அடிமைகள் அல்லர் என்றிட எழுக எழுகவே
ஆங்கிலேயரால் கையளிக்கப்பட்டகொத்தடிமைகளும் அல்லர்என எழுக எழுகவே
தமிழின உணர்வை மேலோங்க எழுகவே
தமிழாய், தமிழினமாய் பொங்கி எழுவோம்
தமிழன் வாழும் ஈழமே தமிழீழம் என்றிட எழுகவே
அதனைக்கூறிட தமிழருக்கு உரிமையுண்டு – என்றிட எழுக எழுகவே தமிழ்மண்ணே!

(12) தமிழ் மக்கள் மாக்கள் அல்லர் என்றிட எழுக எழுகவே
தமிழ் மானிடம் அடிமையல்ல என்றிட எழுக எழுகவே
தமிழ் மாவழிவு கண்டதை கூறிட எழுக எழுக எழுகவே
தமிழ் மாபுரட்சி காணுக் எனக்கூறிட எழுக எழுகவே!

(13) விடுதலைக்கு ஆயுதங்கள் தமிழ் மண்ணே!
விடுதலைக்கு அதிசயங்கள் தமிழ் மண்ணே!
விடுதலைக்கு நம்பிக்கை தமிழ் மண்ணே!
விடுதலைக்கு ஒற்றுமை தமிழ் மண்ணே எழுக எழுகவே!

(14) நம்புங்கள் நாளை நல்லது என எழுகவே
ஒம்புங்கள் ஒழுக்கத்தினை தமிழ் மண்ணே!
வீம்புகள் வேண்டாம் தமிழ் மண்ணே!
தோம்புகள் தோறும் பெருமையுடன் எழுக தமிழ்மண்ணே!

(15) மாறா மறவர்கள் நாம் மண்டியிடோம் மண்ணை மீட்காது என்றிட எழுக எழுகவே
அன்புடனே கேட்கின்றோம் எம்மை அடக்காதீர் என்றிட எழுக எழுகவே
அன்புடனே கேட்கின்றோம் எம்மை ஆக்கிரமிக்;காதீர் என்றிட எழுக எழுகவே
அன்புடனே கேட்கின்றோம் எம்மை அழிக்காதீர் என்றிட எழுக எழுகவே தமிழ்மண்ணே!

(16) உலகமே ஒரு கணம் மனதைத்திறந்து பார் – எம்
இனத்தை இடத்தை அபகரித்து இடக்கரடக்கலால்
தமிழை அழிக்கும் உபாயத்தை காட்டிட எழுக எழுகவே
காலம் காலமாயப் போராடித் தோற்றோம்
காலம் காலமாகத் தோற்றும் போராடினோம் என்றிட எழுக எழுகவே
நேற்றுப்போன வாழ்வில் இருப்பது தாழ்வல்ல என்றிட எழுக எழுகவே
சாற்றுவதற்கு கலைவீர் மௌனம் – என்று தமிழே எழுகவே
போற்றிடுவோம் எம்மினப்பெருமையினை என்றும்இனிதே எழுகவேதமிழ்மண்ணே!

மருத்துவர் சி. யமுனாநந்தா