‘எழுக தமிழில்’ கடல் அலைபோல திரண்ட மக்கள்: தொடர்ந்தும் சாரி சாரியாக மக்கள் கூட்டம் (வீடியோ)
யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் ஆரம்பமான ‘எழுக தமிழ்’ பேரணியில் சுமார் 30,000 க்கும் அதிகமான மக்கள் கடல் அலைபோல திரண்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் விடுதலை உணர்வுடன் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பாகங்களிலும் இருந்தும் பேருந்து வண்டிகளில் தொடர்ந்தும் மக்கள் சாரி சாரியாக வந்தவண்ணம் உள்ளனர். சிறுவர்கள் முதல் வயதுவந்தவர்கள் வரை பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்துகொண்டு வருகின்றவேளை மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம் நடைபெற உள்ள முற்றவெளியில் திரண்டுள்ளனர். அங்கு வட மாகாண முதலமைச்சர் உட்பட பல முக்கியஸ்தர்கள் உரையாற்ற உள்ளனர்.
தற்பொழுது முற்றவெளியில் பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்து சமகளம் இணையத்துடன் இணைந்திருங்கள்
N5











