செய்திகள்

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு கொடுத்து விட்டு கண்டியில் விருந்து நிகழ்வில் நின்ற ரெலோ செல்வம் அடைக்கலநாதன்

யாழ் முற்றவெளியில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற எழுக தமிழ் மக்கள் பேரணிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த ரெலோ அமைப்பு அந்தப் பேரணியில் கலந்து கொள்ளவில்லை.

ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதிதலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்றைய தினம் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்ளாது அதனைப் புறக்கணித்து கண்டியில் இடம்பெற்ற பொது நிகழ்வென்றின் விருந்துபசாரத்தில் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் பொ.இராதாகிருஸ்ணன், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர்.

வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற மணிவிழாவுக்கும் இவர் விருந்தினராக அமழைக்கப்பட்ட போதும் அதிலும் பங்கேற்கவில்லை.

இதேவேளை, எழுக தமிழ் பேரணியில் ரெலோ அமைப்பு சார்பில் அதன் முக்கியஸ்தர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

kan1.jpgA

N5