எவ்வளவு பேரைகொல்ல முடியுமோ அவ்வளவுபேரை கொல்வதே நோக்கம்
பிரான்சில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதல் இடம்பெற்ற நீஸ்ப்பகுதியில் காணப்பட்ட டேமியன் அலமென்ட் என்ற பிரான்ஸ் செய்தியாளர் வாண வேடிக்கைகள் முடிந்த கையோடு குறிப்பிட்ட கனரக வாகனம் வந்தது.
நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் அது வந்தது. எவ்வளவுபேரை கொல்லமுடியுமோ அவ்வளவு பேரைகொல்வதே அதனை செலுத்திவந்தவரின் நோக்கம். வீதியின் இருபக்கமும் உடல்கள் பந்துகளை போன்று பறப்பதை நான் கண்டேன்.
என்வாழ்நாளில் கேட்க விரும்பாதா அலறல்களை அழுகுரல்களை நான் கேட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீஸ் பகுதியில் காணப்பட்ட அப்பகுதியை சேர்ந்த ஓருவர் வீதியில் படுகொலை இடம்பெற்றது,நான் எல்லா இடங்களிலும் உடல்களை கண்டேன் என தெரிவித்துள்ளார்.







