ஐஎஸ் தென்னாசியாவில் காலூன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன
சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள ஐஎஸ் தளங்கள் ஆட்டம்காணத்தொடங்கியுள்ளதால், ஐஎஸ் அமைப்பை சுற்றியுள்ள அதன் ஆதரவுக்குழுக்களும் தென்னாசியாவில் உள்ள அதன் போட்டிக்குழுக்களான அல்ஹைடா போன்றவையும் மீண்டும் தீவிரமடையத்தொடங்கியுள்ளன.
ஐஎஸ் அமைப்பின் பலம் குறைவடைவதற்கான வாய்ப்புகள் தென்படும் இன்றைய சூழ்நிலையில் அல்ஹைடாவிலிருந்து வெளியேறிய அமைப்புகள் அதனுடன் மீண்டும் இணையுமா அல்லது ஐஎஸ் பலவீனமான தேசங்களில் ,இனக்குழுக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தன்னை பலப்படுத்தி செயற்பட தொடங்குமா என்பதே பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களின் கேள்வியாக காணப்படுகின்றது.
2003 இல் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பின்னர் ஆப்கானே பயங்கரவாதத்தின் மையப்பகுதி என்ற நிலை மாற்றமடைந்தது.ஈராக்கே பயங்கரவாதத்தின் முக்கிய தளம் என்ற நிலை உருவானது, சிரியாவில் 2011 இல் கிளர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நிலை தீவிரமடைந்தது.
தற்போது ஐஎஸ் ஈராக்கிலும், சிரியாவிலும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது அதன் காரணமாக ஆப்கானிஸ்தானிலும் ,பாக்கிஸ்தானிலும் அது மிகப்பலம் பொருந்தியதாக மாறும் ஆபத்து காணப்படுகின்றது.
2014 முதல் ஐஎஸ் பல ஆப்கான் பாக்கிஸ்தான் பயங்கரவாத குழுக்களை வெற்றிகரமாக தன் வசம் ஈர்த்துள்ளது.பின்னர் இந்த குழுக்களை ஓன்றிணைத்து ஐஎஸ்கே என்ற அமைப்பினை ஐஎஸ் உருவாக்கியிருந்தது.
எனினும் பின்னர் இந்த அமைப்பிலிருந்து லக்சர் ஈ ஜவாங்கி எனும் அமைப்பு பிரிந்து சென்றது இந்த அமைப்பே கடந்த வாரம் பாக்கிஸ்தானில் பொலிஸ்பயிற்சி கல்லூரி மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.இதன் ஓரு பிரிவு அல்ஹைதாவுடனும் ஏனைய பிரிவு ஐஎஸ் உடனும் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.இது தவிர பாக்கிஸ்தான் தலிபான் அமைப்புலிருந்து விலகிய குழுவொன்றும் ஐஎஸ் அமைப்புடன் இணைந்துள்ளது.
ஐஎஸ் அமைப்புடன் இணைந்து செயற்படும் குழுக்களின் தாக்குதல்கள் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் பாக்கிஸ்தானில அதிகரித்துள்ளதுடன்,அவை பழங்குடியினர் வாழும் பகுதிகளில் இருந்து நகரப்பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளன.
ஆப்கானிஸ்தானிலும் ஐஎஸ் ஆதரவு குழுவின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன, அங்கு பொதுமக்களை இலக்குவைப்பதும் அதிகரித்துள்ளது.
இதனை வேறுவகையாகவும் குறிப்பிடலாம் – அதாவது ஐஎஸ் இஸ்லாமிய தேசத்தை அமைக்கும் நோக்கத்திலிருந்து விடுபட்டு சர்வதேச பயங்கரவாத இயக்கமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. பலவீனமான நிர்வாகங்களை கொண்ட பகுதிகளே அதன் இலக்கு
ஐஎஸ் அமைப்பிற்கு சவால் விடும் அமைப்புகளாக ஆப்கானிஸ்தான் தலிபான், பாக்கிஸ்தான் தலிபான், அல்ஹைடா ஆகிய காணப்படுகின்றன, எனினும் தென்னாசியாவில் ஐஎஸ் மீதான கவர்ச்சி கவனத்தில் எடுக்கவேண்டியதாகவே காணப்படுகின்றது.
மேலும் தன்னை பலதளங்களில் செயற்படும் அமைப்பாக மாற்றுவதற்காக ஐஎஸ் ஆப்கான் மற்றும் பாக்கிஸ்தானில் தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளது.இராக் மற்றும் சிரியாவில்என்ன தோல்வி ஏற்பட்டாலும் அது அதன் தென்னாசிய செயற்பாடுகளை பாதிக்காது, ஆப்கான் மற்றும் பாக்கிஸ்தானில் அது தொடர்ந்து வளர்ச்சியடையும்.
ஆப்கான் மற்றும் பாக்கிஸ்தான் அரசாங்கங்கள் இந்த ஆபத்திற்கு எதிராக ஓன்றிணைந்து செயற்பாடபட்சத்தில் இந்த அபாயம் தென்னாசியா முழுவதற்கும் பரவலாம்.
ஐஎஸ் அமைப்பின் ஆதரவு குழுக்கள் ஏற்கனவே இந்தியாவிற்குள் செயற்பட தொடங்கியுள்ளன,இலங்கை மாலைதீவிலும் அவற்றின் பிரசன்னம் காணப்படுகின்றது.




