செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் உட்பட இருவர் கொலை

பத்தேகம பிரதேச சபைக்காக கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட கயான் டிலன்த எனும் 36 வயது நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பத்தேகம – எலகந்த பகுதியில் நேற்று இரவு 8.30 அளவில்மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை, கூரிய ஆயுதத்தால் இவர் தாக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பிரதேச மக்கள் இணைந்து அவரை பத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் பலியாகியுள்ளார்.

இதேவேளை, பிலியந்தலை பகுதியில் நபரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டுக்கு அருகில் இருந்து கடைக்குச் சென்ற வேளை அங்கு ஏற்பட்ட முரண்பாடே தாக்குதலுக்குக் காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிலியந்தல – பங்காளவத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இதன்போது பலியாகியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து இதுவரை இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது.

n10