செய்திகள்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் பங்களிப்போடு வவுனியா பல்கலைக்கழகத்தில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்சி

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் பங்களிப்போடு வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கைகள் பீடம் ஏற்பாடு செய்துள்ள இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கோடு தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்சி திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட வதிவிட பிரதிநிதி மலினி கேர்விங், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாதசுந்தரன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரி. மங்களேஸ்வரன் உட்பட பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.(15)