ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வருகை
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையை வந்தடைந்துள்ளார்.தென் கொரியாவின் குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிட்யூட்டின் தலைவராக உள்ள பான் கீ மூன், அந்த அமைப்பின் சார்பிலும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.
அத்துடன் இலங்கையில் அமைக்கப்படவுள்ள காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் தொடர்பாகவும் அவரது இலங்கை விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.(15)




