ஐநா செயலாளருடன் ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு
ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கை விவகாரம் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாக ஐநா செயலாளர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, டயஸ்போராவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
-(3)




