ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி நிற்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம் : ஜேர்மன் சான்சிலர் தெரிவிப்பு
ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் கூடவுள்ள ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தின் போது ஆரயாப்படவுள்ளதாகவும் இதன்போது அங்கு வசிக்கும் இலங்கைகயர்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாகவும் ஜேர்மன் சான்சியூலர் அஞ்சலா மேக்கல் தெரிவித்துள்ளார்.
நேற்று தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பின்னர் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போது ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பாக ஏதேனும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்கள் தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். எதிர்வரும் செப்டம்பர் மாதம் கூடவுள்ள ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தின் போது இது தொடர்பாக ஆராயப்படும். இதன்போது இங்குள்ள இலங்கையர்கள் தொடர்பாகவும் ஆராயவுள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.




