ஐஸ்லாந்தில் இலங்கைப் பெண்களை அடிமைகளாக வைத்திருந்த இலங்கையர் சிக்கினார்…..!
இரண்டு இலங்கைப் பெண்களை அடிமைகளாக நடத்தி வந்த இலங்கையர் ஒருவர் தெற்கு ஐஸ்லாந்தின் விக் நகரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மனிதக் கடத்தல் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளும் அந்த நாட்டு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்ததுடன் பெண்களையும் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபரின் வீட்டின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த இரகசிய அறையொன்றில் மீட்கப்பட்ட இரண்டு இலங்கை பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் அந்த நாட்டு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
N5




