செய்திகள்

ஐ.எஸ் அச்சுறுத்தல் இலங்கைக்கு உண்டு : ஹெல உறுமய

ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இலங்கைக்கு இல்லையென யாராலும் கூற முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் அச்சுறுத்தல் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகள் மூலமே வருமென கருத முடியாது எனவும் அவை இல்லாது வேறு வழியில் வரலாம் எனவும் ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த ஶ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் அந்தக் கட்சியினரால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இலங்கைக்கு இல்லையென அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்தியா , பங்களாதேஷ் உள்ளிட்ட இலங்கைக்கு அன்மித்த நாடுகளுக்கு அந்த அச்சுறுத்தல் இருக்குமென்றால் எப்படி இலங்கைக்கு இல்லையென கூற முடியும். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டால் மட்டும் தாக்குதல் நடத்தும் என்றில்லை. அண்மையில் பிரான்சில் வாகனமொன்றை மக்கள் மீது மோதி பலரை கொன்றது போன்று இங்கும் செய்யலாம். இதனால் அந்த அமைப்பின் அச்சுறுத்தல் இங்கு இல்லையென கூறுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)