செய்திகள்

ஐ.எஸ் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதா ? புலனாய்வு பிரிவு விளிப்புடன்

ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பாக இலங்கையில் புலனாய்வு பிரிவினர் எப்போதும் எச்சரிக்கையுடனேயே இருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிக்கேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழுவொன்று கேரலாவிலிருந்து நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு படையினரும் விளிப்புடனேயே இருக்கின்றனர். யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.
R-06