செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் ஆயுதம் தயாரிக்க உதவியமை அம்பலம்: ஐ.நா ஆய்வில் தகவல்

இந்தியா உட்பட 20 நாடுகளில் உள்ள நிறுவனங்களின் மூலம் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் மூலப் பொருட்கள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

ஐ.நா. சபையினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் துருக்கி, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் செயல்படும் நிறுவனங்கள் ரசாயன ஆயுதங்கள், வெடி மருந்துகளை தூரத்தில் இருந்து வெடிக்க செய்வதற்கான அலைபேசிகள் போன்ற 700 பொருட்களை தயாரித்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பானது ஈராக் மற்றும் சிரியாவில் பெரும் பகுதியை
ஆக்கிரமித்துள்ளது. துருக்கியை சார்ந்த 13 நிறுவனங்களும் அதற்கடுத்தபடியாக இந்தியாவை சார்ந்த 7 நிறுவனங்களும் இதில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஜேம்ஸ் பெவன் என்பவர் கூறும்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு
அமைப்பானது தன்னிரைவு பெற்ற அமைப்பாக மாறி வருவதாகவும் அதற்கு பல நாடுகள் மறைமுகமாக உதவி செய்வதாகவும் குறிப்பிட்டார். இந்த பொருட்கள் யாவும் சிரியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த தாக்குதல்களின் போது கைப்பற்றப்பட்டதாகும்..

இது குறித்த ஐ.நா. வின் விசாரணைக்கு துருக்கி அரசு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதாகவும் திரு. பெவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

N5