செய்திகள்

ஐ.தே.கவிலிருந்து விலகி தனித்து போட்டியிட ஶ்ரீ.ல.மு.கா தீர்மானம்?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பத்தில் இணங்கியிருந்த போதும் தற்போது  தனித்து போட்டியிடுவதற்காக கட்சியினர் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அந்த கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிஷாட் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடும் காரணத்தினாலே முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடனும் கிழக்கு மாகாணத்தில் தனித்தும் போட்டியிடுவதற்கே அந்த கட்சி தீர்மானித்திருந்தது. ஆனால் சகல மாவட்டங்களிலும் தனித்து போட்டியிடுவது தொடர்பாகவே அந்த கட்சி ஆராய்ந்து வருகின்றது.
எவ்வாறாயினும் தனித்து போட்டியிடுவது தொடர்பாக இது வரை இறுதி தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் எதிர்வரும் நாட்களில் இறுதி தீர்மானத்தை அந்த கட்சி அறிவிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.