ஐ.தே.கவுக்கும் பஸிலுக்குமிடையே எந்த பேச்சும் கிடையாது : தயாகமகே
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கம் எதுவும் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது என அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐ.தே.கவினருக்கும் மற்றும் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையே எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் டிலான் பெரேரா பஸிலுக்கும் ஐ.தே.கவினருக்கும் இடையே இரகசிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பாக பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




