செய்திகள்

ஐ.தே.க எந்த குற்றவாளியையும் பாதுகாக்காது : கட்சி செயலாளர்

ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு குற்றவாளியையும் பாதுகாக்காது எனவும் இதன்படி மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பாக யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுபதற்கு தாம் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம் எனவும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் காசீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று அலரி மாளிகையில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளார்.
கோப் அறிக்கையை அடிப்படையாக கொண்டு சிலர் ஐக்கிய தேசிய கட்சி தொடர்பாக தவறான வகையில் கருத்து வெளியிடுகின்றார்கள். ஆனால் நாம் யாரையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட்டதில்லை. யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். என அவர் தெரிவித்துள்ளார் -(3)