செய்திகள்

ஐ.நா உயிரிழப்புகளை தடுக்க தவறியதை மூன் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்

அலன்கீனன் ( சர்வதேச நெருக்கடி சபை) 

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் 2009 இல் உள்நாட்டு யுத்தத்தின் முடிவின் பின்னர் விஜயம்  மேற்கொண்ட இலங்கையை வித்தியாசமான இலங்கைக்கு  பயணம் மேற்கொண்டுள்ளார்.

2009 மே மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளை இறுதியுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகள் பான் கீ முனை அதிர்ச்சியடைய வைத்தன. இறுதியுத்தத்தின்போது வடக்கு கிழக்கில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கருத்து நிலவுகின்றது.

பான் கீ மூனே உத்தரவிட்ட உள்ளக ஆய்வின்மூலம் பொதுமக்களிற்கு உயிர் இழப்புகள் ஏற்படுவதையும், மனித உரிமைமீறல்களையும் திட்டமிட்ட வகையில் தடுப்பதற்கு ஐ.நா தவறிவிட்டமை தெரியவந்தது.

தற்போது இலங்கையில் பெருமளவு சேதங்கள் திருத்தப்பட்டுள்ளன, புனரமைக்கப்பட்டுள்ளன. 2015 முதல் ஜனாதிபதிசிறிசேன தலைமையிலான அரசாங்கம் சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துவருகின்றது. இந்த நிகழ்ச்சி நிரல் தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவிற்கு கொண்டுவருவது, சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிப்பது, நல்லிணக்கத்தை ஊக்குவிப்பது போன்ற விடயங்களும் காணப்படுகின்றன.எனினும் நாடு முழுவதும் அரசியல், சமூக மற்றும் உளவியல்ரீதியிலான காயங்கள் காணப்படுகின்றன, இவை இதுவரை ஏற்பட்டுள்ள பலவீனமான முன்னேற்றத்தை பாதிக்கக்கூடியவையாக காணப்படுகின்றன.

ஐக்கியநாடுகளை பொறுத்தவரை இலங்கை தொடர்பான குழப்பமான வரலாற்றை கொண்டுள்ளது. கடந்த முறை பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளை நாட்டை மகிந்தராஜபக்சவும் அவரது வலுவான குடும்பத்தினரும் ஆண்டுவந்தனர். விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட வெற்றி குறித்த அலைiயும், சிங்களதேசியவாதத்தையும் அவர்கள் பயன்படுத்தினர்.

2010 இல் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள் குழு இறுதியுத்தத்தில் ஈடுபட்ட ஈரு தரப்பினரும் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டமைக்கான நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்தது. அவ்வேளை காணப்பட்ட அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் அந்த அறிக்கையை கடுமையாக கண்டித்த போதிலும் அந்த அறிக்கையே இலங்கை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் வலுவான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

2015 இல் மகிந்தராஜபக்ச தோற்கடிக்கப்ட்டமையும் சிறிசேன ஜனாதிபதியானதும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கையில் சந்தர்ப்பம் கிடைத்தது.மேலும் நல்லிணக்கத்திற்கு யுத்தகுற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவது அவசியம் என்ற விடயமும் பெருமளவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிறிசேனா அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கியது, இதன் மூலம் காணமற்போனோர் அலுவலகத்தை ஏற்படுத்தவும், உண்மை ஆணைக்குழுவை ஏற்படுத்தவும்,யுத்த குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கும் ஏற்றுக்கொண்டது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புகள்சிறிசேனாவின் நிகழ்ச்சி நிரலினை தீவிரமாக ஆதரித்துவருகின்றன.எனினும் அரசாங்கத்தின் முயற்சிகள் போதிய வளங்கள் அற்றவையாகவும், குழப்பகரமான தகவல்களால் பலவீனமாக்கப்பட்டவையாகவும்,காணப்படுகின்றன.

பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடமிருந்து தெளிவான வழிகாட்டல்கள் காணப்படாதது குறிப்பிடப்படவேண்டிய விடயம், அரசுடன் உடன்பட மறுப்பவர்களிற்கான சுதந்திரம்,மனித உரிமை பாதுகாப்பில் முன்னேற்றங்கள் போன்றவை காணப்பட்டாலும், தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் இன்னமும் முடிவிற்குகொண்டுவரப்படவில்லை,மேலும் அரசாங்கத்திற்குள் உள்ள முக்கிய பிரிவுகள் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவேன் எனமனித உரிமை பேரவைக்கு வாக்குறுதியளித்தது.எனினும் இலங்கையில் தொடர்ந்தும் பொலிஸார் இந்த சட்டத்தினை அடிப்படையாக வைத்து கைதுகளை மேற்கொண்டுவருகின்றனர், 200 தமிழர்கள் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர்,பலர் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளுடன் இராணுவபுலனாய்வாளர்களை தொடர்புபடுத்தும் விசாரணைகளில் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்தும் தலையிட்டுவருகின்றனர், வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பிற்கான நிதி அதிகரித்துள்ளதுடன்,வடக்குகிழக்கில் இராணுவத்தின் பலமான பிரசன்னம் காணப்படுகின்றது.

இவ்வாறான விடயங்களில் தான் அளித்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற தவறிவருகின்றமை குறித்து தமிழ் மக்கள்  கவலையடையத்தொடங்கியுள்ளனர்.

காணமற்போனோர் குறித்த அலுவலகத்தை ஏற்படுத்துவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை பராட்டப்படவேண்டிய விடயம், அதேவேளை பான்கீ மூன் மனித உரிமை பேரவையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதிக்கும், பிரதமரிற்கும்  அழுத்தம் கொடுக்கவேண்டும்.

இந்த வாக்குறுதிகளில் முக்கியமானது பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதித்துறையினரின் பங்களிப்புடனான விசேட நீதிமன்றம்,இது இலங்கையின் இறமையை பாதிக்கும் என தேசியவாதிகள் போர்க்கொடி தூக்கிவரும் நிலையில்  ஜனாதிபதியும், பிரதமரும் தங்கள் முன்னைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க தொடங்கிவிட்டனர்.

சிறிசேன அரசாங்கம் தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கிய போதிலும் அது தற்போது தயங்குகின்றது.2017 மார்ச் இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் விசேட நீதிமன்றத்திற்கான  சட்டமூலத்தை சமர்ப்பிக்காது என்றே தோன்றுகின்றது.

யுத்தகுற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேபங்களிப்புடன் கூடிய விசேட நீதிமன்றத்தை ஏற்படுத்தும் சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றும் வரை  ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் கண்காணிப்பு தொடரவேண்டும் என்பதற்கு பான் கீ மூன் தனது ஆதரவை வெளிப்படுத்தவேண்டும்.

நிலைமாற்றுக்கால நீதி மற்றும் அரசமைப்பு முயற்சிகளிற்கு ஆதரவாக சிங்களமக்கள் மத்தியில் வெளிப்படையாக வாதிடவேண்டும், கருத்துக்களை வெளியிடவேண்டும் என பான்கீ மூன் பிரதமரையும், ஜனாதிபதியையும் கேட்டுக்கொள்ளவேண்டும்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களிலும்,அதற்கு பின்னரும் இலங்கையில் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு ஐநா தவறிவிட்டது என்பதை பான்கீ மூன் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.இலங்கையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தை அமைப்பதற்கு வலியுறுத்தவேண்டும்.