செய்திகள்

ஐ.நா.சபையில் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டிய நிகழ்ச்சி

ஐஸ்வர்யா தனுஷ், நிருபர்களிடம் கூறியதாவது:–

‘‘ஒரு இந்திய கலைஞரின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஐ.நா.சபையில் நடப்பது இதுதான் முதல் தடவை. அந்தவகையில், ஐ.நா.சபையில் நடைபெறும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆடுவதில் பெருமைப்படுகிறேன். இதற்கு முன்பு எம்.எஸ்.சுப்புலட்சுமி, பண்டித் ரவிசங்கர், எல்.சுப்பிரமணியம், சுதா ரகுநாதன், ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகள் ஐ.நா.சபையில் நடந்துள்ளன. அதன்பிறகு ஒரு இந்திய கலைஞரின் நிகழ்ச்சி இப்போதுதான் நடக்கிறது. இதில், 190 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

அமெரிக்காவில் நடைபெறும் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு என்னுடன், என் குரு மீனாட்சி சித்தரஞ்சனும் உடன் வருகிறார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், நியூயார்க் தமிழ் சங்கத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறேன். 12–ந் தேதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ் திரைப்படம் பற்றி பேசுகிறேன். வருகிற 14–ந் தேதி சென்னை திரும்புகிறேன்’’.  இவ்வாறு ஐஸ்வர்யா தனுஷ் கூறினார்.

N5