ஐ. நா தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க பிரிட்டன் வலியுறுத்து
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அது. நா மனித உரிமைகள் சபையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டுமென பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய இராஜ்யத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆலோக் ஷர்மா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை மனித உரிமைகள் சபை அமர்வுகளில் கலந்து கொண்டிருக்கும் இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர அலோக் ஷர்மாவை சந்தித்து ஐ. நா தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.




