செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் : இலங்கை மேலும் 2 வருட கால அவகாசம் கோரலாம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் இன்று 27ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் கூட்டத்தொடர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் கலந்துக்கொள்வதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளன.
இதேவேளை நாளைய தினம் அங்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். இதன்போது அவர் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மேலும் கால அவகாசம் கோரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 18 முதல் 24 மாத கால அவகாசம் கோரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)