செய்திகள்

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி, தனது 93ஆவது வயதில் காலமானார்.

எகிப்தியரான இவர், ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வகித்த முதலாவது அரேபியராவார்.

1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரக அவர் பதவியேற்றபோது, உலக நாடுகள் முதலாவது வளைகுடா போரை சந்திந்திருந்தன.

யூகோஸ்லாவியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு போர் மற்றும் வளைகுடாவில் தொடர்ந்த அமைதியின்மையையும் ஆகிவற்றை உடனடி பிரச்சினையாக அவர் எதிர்கொண்டார்.

n10