செய்திகள்

ஐ.ம.சு.கூவிலிருந்து ஶ்ரீ.ல.சு.கூ விலக வேண்டும் : கட்சியினர் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்பு மனு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால இணங்கியுள்ள நிலையில் அந்த கூட்டமைப்பிலிருந்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டுமென ஜனாதிபதிக்கு அந்த கட்சியிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு கூட்டணியிலிருந்து விலகி தனியாக சுதந்திரக் கட்சியை போட்டியிட செய்வோம் என கட்சியின் சிலர் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை தோற்கடிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் மைத்திரி அணியுடன் இணைந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே இந்த கோரிக்கைகளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இது தொடர்பாக கட்சியின் உயர் மட்டம் இது வரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.