செய்திகள்
ஐ.ம.சு.கூ அல்லது ஶ்ரீ.ல.சு.க செயலாளர் பதவி மஹிந்த அணிக்கு வேண்டுமாம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைக்க வேண்டுமென்றால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டுமென மஹிந்த அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான யோசனையை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் அவர்கள் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்னர் குறித்த பதவியை தங்களுக்கு வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




