செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு

தன்னுடன் கலந்துரையாடலுக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டலஸ் அழகப்பெரும , மகிந்தானந்த அலுத்கமகே , குமார வெல்கம , கெகலிய ரம்புக்வெல உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சியை அமைக்க வேண்டுமென மகிந்தவுக்கு கோரிக்கை விடுப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)