செய்திகள்

ஒன்றுபட்ட சமூகத்தினை உருவாக்குவோம்: மட்டக்களப்பில் கலாசார அமைச்சர்

இந்த நாட்டில் இன்று அரசியலில் ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையினை பயன்படுத்தி ஒன்றுபட்ட சமூகத்தினை உருவாக்கிக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்தார்.

முட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குரிய பிரதேச கலாசார நிலையம் வெல்லாவெளியில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஒரு கோடியே 57 இலட்சம் ரூபா செலவில் இந்த கலாசார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி பிரதீபா சேரசிங்க தலைலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பநி.நாவின்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சுpறப்பு அதிதிகளாக கிராமி பொருளாதார அபிவிருத்தி பிரதிpயமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நுல்லாட்சி அரசாங்கத்தின் கலைத்துறையினை மேம்படுத்தி அதன் மூலம் இனங்களுக்கிடையே ஐக்கியத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த கலாசார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு உரையாற்றிய அமைச்சர்,

இன்று இந்த நாட்டில் வித்தியாசமான அரசியல்நிலைமை நிலவுகின்றது.சு.கா.வினை சேர்ந்தவர் ஜனாதிபதியாக இருக்கின்றார்.ஐ.தே.க.வை சேர்ந்தவர் பிரதமராக உள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சியாக உள்ளார்.இதுதான் புதுமையான அரசியல் எமக்கு தேவையான அரசியல்.நாங்கள் எங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை பேசி தீர்க்கவேண்டும்.

30வருடகாலயுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் நாங்கள் ஒன்றுபட்டு செயற்பட்டு அந்த நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில் செயற்பட்டுவருகின்றோம்.
வேறுபட்ட கலாசாரங்களை நாங்கள் கொண்டிருந்தாலும் அந்த கலை ஊடாக இனங்களுக்கிடையே நல்லுறவு கட்டியெழுப்பப்படவேண்டும்.

இந்த நிகழ்வின்போது கலாசார நிலையத்திற்கான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

IMG_0002 IMG_0016 IMG_0035 IMG_0040 IMG_0096 IMG_0120