செய்திகள்

ஒரு மாணவிக்காக இருவருக்கிடையே மோதல் : மாணவன் ஒருவன் மற்றைய மாணவன் மீது கத்திக்குத்து

கண்டி பகுதியில் பரபல ஆண்கள் பாடசாலைகள் இரண்டை சேர்ந்த மாணவர்கள் இருவர் வீதியில் மோதிக்கொண்டுள்ளதுடன் இதன்போது மாணவன் ஒருவன் மற்றைய மாணவனுக்கு கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே பகுதியை சேர்ந்த மகளிர் பாடசாலையொன்றின் மாணவியொருவரை யார் காதலிப்பது என்ற விடயமே இவர்களிடையே மோதல் ஏற்படக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருவரும் நேற்று வீதியில் சண்டையிட்டுள்ளதுடன் இதன்போது மற்றைய மாணவன் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது அங்கிருந்தவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக 16 வயது மாணவர்களே மோதிக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)