செய்திகள்

ஒரு வருட அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தால் காணாமல்போனோரை கண்டுபிடித்திருப்போம்: பர­ண­கம

எமது ஆணைக்­கு­ழு­வுக்கு காணாமல் போன­வர்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்கு இன்னும் ஒரு வருட கால அவ­கா­சமும் மூன்று விசா­ரணைக் குழுக்­களும் வழங்­கப்­பட்­டி­ருந்தால் காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று கண்­டு­பி­டித்­தி­ருப்போம் என்று காணாமல் போன­வர்கள் குறித்து விசா­ரணை நடத்தும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மெக் ஷ்வல் பர­ண­கம தெரி­வித்தார்.

காணாமல் போன­வர்­களில் சிலர் வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றி­ருக்­கலாம் என்ற சந்­தேகம் எனக்கு உள்­ளது. எமது ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் நாங்கள் விரைவில் ஜனா­தி­ப­திக்கு அறிக்கை சமர்ப்­பிப்போம் என்றும் பர­ண­கம குறிப்­பிட்டார்.

காணாமல் போன­வர்கள் குறித்து விசா­ரணை நடத்தும் ஆணைக்­கு­ழுவின் பத­விக்­காலம் எதிர்­வரும் ஜூலை மாதம் 15 ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வர­வுள்ள நிலையில் அதன் செயற்­பா­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். மெக்ஷ்வல் பர­ண­கம இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்

“காணாமல் போன­வர்கள் குறித்து விசா­ரித்து வந்த எமது ஆணைக்­கு­ழுவின் செயற்­பாட்­டுக்­காலம் எதிர்­வரும் ஜூலை மாதம் 15 ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வரு­கின்­றது. அதன் பின்னர் நாங்கள் எமது விசா­ரணை அமர்­வுகள் மற்றும் நாங்கள் என்ன செய்தோம் என்­பது தொடர்பில் இறுதி அறிக்­கையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கைய­ளிப்போம். தற்­போது காணாமல் போன­வர்கள் தொடர்பில் ஆராயும் புதிய அலு­வ­லகம் ஒன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளதால் இதன் பின்னர் அந்த அலு­வ­லகம் நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என்று நம்­பு­கின்றோம்.

இதே­வேளை காணாமல் போன­வர்கள் தொடர்பில் சுமார் 19000 முறைப்­பா­டுகள் எமக்கு கிடைக்­கப்­பெற்­றன. ஆனால் அவற்றில் 4000 க்கும் மேற்­பட்­ட­வைகள் இரண்டு தட­வைகள் வந்­துள்­ளன. இதே­வேளை காணாமல் போன­வர்­களில் ஒரு சிலர் வெளி­நா­டு­களில் இருப்­பார்கள் என்று நான் கரு­து­கின்றேன். அவ்­வா­றான ஒரு சந்­தேகம் எமக்கு இருக்­கின்­றது. ஆனால் எத்­தனை பேர் இவ்­வாறு இருப்­பார்கள் என்று கூற முடி­யாது. ஆனால் காணாமல் போன­தாகக் கூறப்­படும் சிலர் வெளி­நா­டு­களில் இருப்­ப­தற்­கான சாத்­தியம் உள்­ளது.

மேலும் எமது ஆணைக்­கு­ழு­வுக்கு காணாமல் போன­வர்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்கு இன்னும் ஒரு வருட கால அவ­கா­சமும் மூன்று விசா­ரணைக் குழுக்­களும் வழங்­கப்­பட்­டி­ருந்தால் காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று கண்­டு­பி­டித்­தி­ருப்போம். அதா­வது தற்­போது எம்­மிடம் ஒரு விசா­ரணை குழுவே உள்­ளது. இன்னும் இரண்டு விசா­ரணை குழுக்கள் மேல­தி­க­மாக கிடைத்­தி­ருந்தால் நாம் மேலும் விசா­ர­ணை­களை விரி­வு­ப­டுத்­தி­யி­ருப்போம். ஆனால் எமக்கு அந்த வசதி கிடைக்­க­வில்லை.

அத்­துடன் எமது ஆணைக்­கு­ழு­வுக்கு விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்கு போது­மான கால அவ­காசம் கிடைக்கவில்லை. இன்னும் ஒருவருட காலம் கிடைத்திருந்தால் நாங்கள் மேலும் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருப்போம். அதாவது காணாமல் போனவர்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் பொறுப்புக்கூறியிருப்போம் என்றார்.
R-06