செய்திகள்

ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு மணி நேர மின் வெட்டு

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நாட்டில் ஒரு வாரத்திற்கு மின் வெட்டை அமுல்படுத்த மின் சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும் கொழும்புக்குள் மின்வெட்டை அமுல்படுத்ததிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மற்றைய மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு மணி நேர மின் வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்வெட்டின்போது வைத்தியசாலைகள் மற்றும் தொழிற்பேட்டைகளுக்கு தேவையான மின்விநியோகம் இடம்பெறுமென அமைச்சு தெரிவித்துள்ளது. -(3)