ஒரே நாளில் இரு பட அறிவிப்புகள் உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டோரா, அறம், வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகின. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா’ படத்திற்கும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், நயன்தாரா அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கோலமாவு கோகிலா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. த்ரில்லர் கதையாக உருவாகும் `கொலையுதிர் காலம்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
இதுதவிர அறிவழகன் இயக்கும் த்ரில்லர் கதையிலும், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக `நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார். இன்னொரு தெலுங்கு பட வாய்ப்பும் வந்து இருக்கிறது.
இந்நிலையில், நயன்தாரா நடிக்கவிருக்கும் அடுத்த இரு படங்கள் குறித்த அறிவிப்பு நேற்று ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. அதன்படி நயன்தாரா அடுத்ததாக அஜித் ஜோடியாக `விஸ்வாசம்’ படத்திலும், `லெக்ஷ்மி’, `மா’ குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் த்ரில்லர் கதையிலும் நடிக்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது. `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற 22-ஆம் தேதி ஆரம்பமாகிறது. மேலும் கமல்ஹாசன் ஜோடியாக ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்கள்.(15)




