ஒற்றை இயந்திர விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த அவுஸ்திரேலிய இளைஞர்
உலகம் முழுவதும் தனியாக ஒற்றை இயந்திர விமானம் மூலம் வலம் வந்த அவுஸ்திரேலிய இளைஞர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரெலியாஉயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
ஒற்றை இயந்திர விமானம் மூலம் 18 வயதான Lachlan Smart என்பவர் கடந்த ஜூலை 4 ம் திகதி அவரது பயணத்தை அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
இவர் ஏழு வாரங்களாக 24 ஆயிரம் மைல்கள் உட்பட 5 கண்டங்களில் உள்ள 20 நாடுகளை கடந்து வருகை தந்துள்ளார்.
ஒற்றை இயந்திர விமானம் மூலம் உலகை வலம் வர முயன்ற முதல் அவுஸ்திரேலிய இளம் சிறுவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, Ryan Campbell(19) என்பவரே உலகை வலம் வர முதலில் முயற்சி செய்த அவுஸ்திரேலிய பிரஜை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ryan Campbell தனது பயணத்தை 2013ம் ஆண்டு 7 மாதங்கள் மற்றும் 25 நாட்களில் இந்த முயற்சியை மேற்கொண்டிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சாதனையை பெறுவதற்காக முயற்சித்த இளம் இளைஞனின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கூறியுள்ளார்.

n10




