செய்திகள்

ஒழுக்கம் பேணாத சு.க உறுப்பினர்களுக்கு எதிராக மேம தினத்திற்கு பின் ஒழுக்காற்று நடவடிக்கை : கட்சி செயலாளர் அறிவிப்பு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஒழுக்கத்தை மீறி செயற்படும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மே முதலாம் திகதிக்கு பின்னர் நடவடிக்கையெடுக்கப்படுமென அந்த கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்காது இருப்பது தொடர்பாக கட்சிக்குள் என் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் அவ்வாறு ஒழுக்கத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மே தினத்திற்கு பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க கட்சி தீர்மானித்துள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
n10