செய்திகள்

ஓகஸ்ட் 22இல் பாராளுமன்றத் தேர்தல்

வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரச தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

பாராளுமன்றம் எந்த வேளையிலும் கலைக்கப்படலாம் என்ற ஊகங்கள் அதிகரித்துள்ள இவ்வேளையில், அமைச்சர் ராஜித சேனாரட்ன 20ஆவது சீர்திருத்தத்தை நிறைவேற்றிய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படுமென தெரிவித்திருந்தார்.

க.பொ.த உயர்தர பரீட்சையை கவனத்தில் எடுத்து எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி சனிக்கிழமை தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசதரப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

ஆனால் எப்போது பாராளுமன்றம் கலைப்பது பற்றிய தகவல்கள் உறுதியான தெரியவில்லை.