செய்திகள்

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க கோரி இரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு தா.மகேஸ்வரன் (வயது 73) மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

2016 ஆம் வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இடத்தெரிவு தொடர்பில் இடம்பெற்ற இழுபறிக்கு பின்னர் மாங்குளம், மதவுவைத்தகுளம் ஆகிய பகுதிகளில் பொருளாதார மத்திய நிலையத்தை இரண்டாக அமைக்க உத்தேசித்துள்ள நிலையில், பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயியான தா.மகேஸ்வரன் செவ்வாய்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஓமந்தை பிரதேச சபை கட்டடத்திற்கு முன்னால் தொடர்ந்தும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் பலரும் ஆதரவு வழங்கி வருகின்றனர். வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவரின் உடல்நிலை தொடர்பாக ஓமந்தை வைத்தியசாலை வைத்திய அதிகாரி செ.மதுரகன் வருகை தந்து பார்வையிட்டார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

2010 ஆம் ஆண்டு ஓரங்கிணைப்புக்குழுக் கூட்டம், 21 பாராளுமன்ற, மகாணசபை உறுப்பினர்களின் முடிவின் படி ஓமந்தையில் தான் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும். ஓமந்தையை விடுத்து வேறு இடத்தில் அமைக்கப்படுமாக இருந்தால் தான் இறந்த பின் தான் அது நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

IMG_0251

IMG_0210

IMG_0201.jpgA

N5