ஓமந்தை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியினை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவு
வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வவுனியா பொருளாதார மையம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்படி 2010 ம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பொருளாதார மையத்தை அமைக்க ஒதுக்கப்பட்ட காணியினை தெரிவு செய்வது தொடர்பில் பரிசீலிப்பதற்காக நாளைய தினம் பார்வையிடுவது எனவும் வட மாகாண முதலமைச்சருடன் பேசி இறுதி முடிவை அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறூப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன் , செல்வம் அடைக்கலநாதன், சிறீதரன், சித்தார்த்தன், ஸ்ரீநேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
N5




