செய்திகள்

ஓய்வு பெற்றார் தேர்தல் ஆணையாளர் மகிந்த

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று வெள்ளிக்கிழமையுடன்  ஓய்வு பெற்றுள்ளார்.

எனினும், தேர்தல் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படும் வரை தேர்தல்கள் ஆணையாளருக்குரிய கடமைகளை தாம் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஓய்வு பெறுவதற்கான ஆவணங்களை ஓய்வூதிய திணைக்களத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் நேற்று பிற்பகல்  நடைபெற்றன.