செய்திகள்

ஓரு சீனா கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கவேண்டியதில்லை- டிரம்ப்

தாய்வான் சீனாவின் ஓரு பகுதி என்ற கொள்கையை அமெரிக்கா தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் சமீபத்தில் தாய்வான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியது குறித்து சீனா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா நான்கு தசாப்தங்களாக பின்பற்றி வரும் ஓரு சீனா கொள்கையை நான் நன்கு அறிந்துள்ளேன்,ஆனால் அதனை தொடர்ந்தும் நாங்கள் ஏன் பின்பற்றவேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் சீனாவின் தற்போதைய கொள்கைகள் குறித்து அதிருப்திவெளியிட்டுள்ளார்.தாய்வான் தலைவருடன் தொலைபேசியில் நான் உரையாடவேண்டுமா இல்லையா என சீனா எனக்கு தெரிவிக்க முடியாது,எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்ஃ