செய்திகள்

கடந்த ஆண்டுகளில் வழங்கிய உதவிகளையும் விட அதிகமான உதவிகளை வழங்குவோம்

கடந்த ஆண்டுகளில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கிய உதவிகளையும் விட அதிகமான உதவிகளை எதிர்வரும் மூன்றாண்டுகளில்  வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் டகேஹிதோ நகாஓ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார் .

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் இன்று  காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் கல்வி மற்றும் நீர்ப்பாசன துறைகளின் அபிவிருத்திக்காக விஷேட உதவிகளை வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது டகேஹிதோ நகாஓ கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த விஷேட ஒத்துழைப்புக்களை வழங்குவதாக கூறியுள்ள அவர், இலங்கை தற்போது புதிய முதலீடுகளுக்கு சிறந்த இடமாக விளங்குவதாகவும் கூறியுள்ளார்.

ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் அற்று வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதனால் அனைத்து நிதியுதவிகளையும் நூற்றுக்கு நூறு வீதமும் உரிய வேலைத் திட்டங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

இவை தொடர்பாக தான் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்துவதாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் டகேஹிதோ நகாஓ உடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி கூறியுள்ளார்.

n10