செய்திகள்
கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்ற வேலைத்திட்டங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு மன்னாரில்
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2015 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு ஏற்க்கனவே திட்டங்கள் நிறைவு செய்யப்பட்ட நிலையில், திட்டத்தை அமுல்ப்படுத்திய அமைப்புக்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை காலை மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதனடிப்படையில் திட்டங்களும் ஒதுக்கீடுகளும் வருமாறு…
01 – நறுவிலிக்குளம் பாடசாலை – மைதானம் புனரமைப்பு –
ரூபா 200,000-00
02 – கருங்கண்டல் விவசாய அமைப்பு – நெல் உலர்த்தும் களம் அமைத்தல் ரூபா 50,000-00
n10





