கடற்படையினரால் பூநகரி, பள்ளிக்குடவில் மேற்கொள்ளப்பட்ட நில அபகரிப்பு பொதுமக்களின் எதிர்ப்பினால் தடுக்கப்பட்டது
பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கிளிநொச்சி – பூநகரி, பள்ளிக்குடா பகுதியில் அமைந்துள்ள தேவாலயக் காணியை கடற்ப்படையினர் சுவீகரிக்கும் முயற்சி இன்று தடுக்கப்பட்டது. .
இந்த சுவீகரிப்பு முயற்சிக்காக நில அளவீடு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று இடம்பெற இருந்த நிலையில் பொதுமக்களும் , தமிழ் அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் அங்கு கூடி எதிர்ப்பை வெளியிட் டனர்.
பள்ளிக்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயம் மற்றும் பொதுமக்களுக்கு உரிய ½ எக்கர் காணியை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஸ்ரீலங்கா கடற்படையினர் அதனை தமக்கு சொந்தமாக்கும் நோக்கிலேயே இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் செய்தி சேகரிக்க சென்றிருந்த ஊடகவியலாளர்களை மிரட்டும் வகையில் கடற்ப்படையினர் அவர்களை புகைப்படம் எடுத்தனர்.
இதேவேளை கடந்த திங்கட்கிழமை பூநகரிப் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிக்கும் நடவடிக்கை பொது மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






