செய்திகள்

கடற்படையினரை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்திய பஸில்

பஸில் ராஜபக்‌ஷ 61 கடற்படை உத்தியோகத்தர்களை முழு நேரமும் தனது வீட்டு வேலைகளுக்காக பயன்படுத்தி வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அனுரகுமார இதனை தெரிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்ஸ அமைச்சராக இருந்தபோது கடற்படையை சேர்ந்த 61 பேரை தமது வீட்டு வேலைகளுக்காக பயன்படுத்தியுள்ளார் இவ்வாறாக போக்கு வரத்து நடவடிக்கைகளுக்காக 12பேரையும் , உணவு சமைத்தல் மற்றும் பரிமாறுவதற்காக 11 பேரையும் , வீட்டை சுத்திகரிக்கவென 26 பேரையும் , தனது நாய்களை பராமறிக்க 6 பேரையும் , தனக்கும் தனது மனைவி புஸ்பாவின் மருத்துவ உதவிகளுக்காக 4 பேரையும் கடற்படையிலிருந்து பெற்று வீட்டில் பணிகளுக்காக ஈடுபடுத்தியுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவிலுள்ள தனது வீட்டை பராமறிக்கவும் 2பேரை பயன்படுத்தியுள்ளார். இவர்களுக்கான சம்பளம் கடற்படையிலிருந்தே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கென பிரபுக்கள் வீட்டில் பணியாற்றவென 5000ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறாக செய்த இவரே இன்று தேசப்பற்று தொடர்பாக கதைக்கின்றார்.  என அவர் தெரிவித்துள்ளார்.
n10