செய்திகள்

கடலில் மூழ்கி இருவர் பலி

அம்பாறை, பொத்துவில் கொட்டுக்கல் கடலிலுக்கு வெள்ளிக்கிழமை (04) மாலை குளிக்கச் சென்று காணாமற்போன இரு இளைஞர்களின் சடலங்கள், இன்று சனிக்கிழமை (05) காலை 07.30 மணியளவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இப்றாலெப்பை முஹம்மது பஹத் (17 வயது), றஹுமான் ராகூத் (19 வயது) ஆகிய இருவரே உயிரிழந்தவர்களாவர்.

சுற்றுலா நிமித்தம் வந்த இவர்கள், கொட்டுக்கல் கடலில் நீராடிய வேளையிலேயே காணாமல் போயிருந்தனர்.

சடலங்கள் பொத்துவில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

 

n10