செய்திகள்

கடலுக்கு அடியில் பற்றைவைத்து கணவா பிடிப்பதை தடைசெய்யவும்: மன்னார் மீனவர்கள் வேண்டுகோள்

மன்னாரின் மீனவர்களில் ஒரு பகுதியினர் பல பகுதிகளில் கடலுக்கு அடியில் மரம் மற்றும் பற்றை வைத்து கணவா பிடிப்பதால் விரைவில் கணவா இனம் அழியும் நிலைகாணப்படுவதாக மன்னார் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கணவாயிணை பிடிப்பதற்கு கடலுக்கு அடியில் பற்றைகள் வைக்கப்படுகிறது. குறித்த பற்றறைகளை கடலுக்கு அடியில் தரமானமுறையில் வைப்பதற்கு   கடற்கரை ஓரங்களில் காணப்படும் மண்களை உரபைகளில் அடைத்து அதணையும் கடலுக்கு கீழ் பற்றைக்கு பாரமாக வைக்கப்படுகிறது
குறிப்பாக கடற்கரையில் இவ்வாறு எடுக்கப்படும் மண் அகழ்வு காரணமாக மாவட்டத்தில் ஆயிரகனக்கான உரப்பைகள் கடலுக்கு அடியில் வைக்கப்படுகிறது.
இதனால் கடல் அரிப்பு ஏற்படுவதற்கு ஏதுவாக இது அமைவதுடன் இதணை தடுக்க கடற்றொழில் திணைக்களம் நடவடிக்கை  எடுக்காமை கவலையழிப்பதாக தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க கடலுக்கு அடியில் வைக்கப்படும் பற்றைகளுள்ள பகுதிக்கு கணவாய்கள்; இன பெருக்கத்திற்காகவே அதிகம் வருதால் இனபெருக்கம் இங்கு நடைபெறுகிறது.
இவ்வேளையில் கணவாயிணை பிடித்து செல்லும் மீனவர்கள் குஞ்சு கணவாயிணையும் பிடித்து செல்கின்றனர். அதனால் எதிர்காலத்தில் கணவாயினம் அழிந்துபோகும் நிலை உருவாகிவருவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே இதனைதடுத்த நிறுத்த நடவடிக்iகையிணை கடற்றொழில் திணைக்களம் எடுக்கவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
n10