செய்திகள்

கடுப்பில் சமந்தா எடுத்த புது முடிவு

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளும் பெயர்போனவர் சமந்தா. இவர் நாகார்ஜூனா மகன் நாகசைதன்யாவை தற்போது காதலித்து வருகிறார், இவர்களின் பெற்றோர் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட விரைவில் நிச்சயதார்த்தம் நடவுக்கவுள்ளது.

கல்யாணத்துக்கு முன் கமிட் செய்து வைத்த படங்களை சீக்கிரம் முடிக்கவுள்ளாராம். அதுமட்டும்மில்லாமல் இனிமேல் இவர் நடித்து வெளியாகும் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்க்கப்போவதில்லையாம். ஏன் என்று விசாரித்தால் படம் சரியில்லை என்றால் அவர் காதுபடவே படத்தை பற்றி தப்பாக பேசுகிறார்களாம்.

இதனால் அவரது மனம் புண்பட்டுவிடுகிறதாம். கஷ்டப்பட்டு நடித்த சில படங்கள் இப்படியானதையொட்டி இனிமேல் அவர் படத்தை அவரே முதல் நாள் திரையரங்குகளில் பார்க்கப்போவதில்லை என்ற முடிவு எடுத்துள்ளார்.

N5