செய்திகள்

கடும் காற்று – மழை நீடிக்கும் : அவதானமாக இருக்கவும்!

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நிலவும் கடும் காற்றுடன் கூடிய மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவும் மற்றும் இன்று அதிகாலையும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் பலவற்றில் கடும் மழை பெய்துள்ளது.
இதேவேளை நேற்று இரவு பல பிரதேசங்களில் கடும் காற்று வீசியுள்ள நிலையில் அதனால் பல பிரதேசங்களில் மின்சார துண்டிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த கால நிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதனால் அது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)