செய்திகள்

கடும் நிபந்தனைகளுடன் பிணையில் பசில் விடுவிப்பு

நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை காணி விவகாரம் தொடர்பில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டு, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பசில் ராஜபக்ச 10 லட்சம் சரீர பிணை மூன்று மற்றும், 50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரம் இறுதி ஞாயிற்றுக் கிழமை நிதிமோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் யுரேசா டி சில்வா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவருக்கு வெளிநாட்டு பயணங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

R-06