கடைசிவரைக்கும் நயன்தாராவை கண்ல காட்டல –
வரும் தீபாவளிக்கு வெளிவரும் காஷ்மோரா திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் நயன்தாரா தவிர படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய விவேக் “பாகுபலி மட்டும் வரவில்லை என்றால் இந்த காஷ்மோரா இந்தியாவே கொண்டாடும் அளவுக்கு இருக்கும், மேலும் இந்த படத்தில் நயன்தாரா நடிச்சிருக்காங்க, ஆனா கடைசிவரைக்கும் நயன்தாராவை கண்ல காட்டாம ஏமாற்றிவிட்டார் கோகுல்.
நான் ரொம்ப ஆர்வமாக இருந்தேன், கிட்டத்தட்ட 10 வருடத்துக்கு முன்பு அவர்கள் நடித்த கள்வனின் காதலி படத்தின் நடித்தேன். அதன் பிறகு இப்போ வாய்ப்பு கிடைத்தும் ஒரு சீன் கூட காம்பினேஷன் இல்லாமல் பண்ணிட்டாரே என்று நகைச்சுவையாக பேசினார்.
N5




