செய்திகள்
கட்டாரில் இருந்து சிகரட்டுகளுடன் வந்தவர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 என்ற விமானத்தில் இலங்கைக்கு வந்த நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி கூறினார்.
அவரிடம் இருந்த 10200 சிகரட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றின் பெறுமதி 102000 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
n10




