கட்டுநாயக்கவுக்கு வந்த மூன்று விமானங்கள் மத்தளவுக்கு திருப்பிவிடப்பட்டன
கடும் பணியுடனான சீரற்ற காலநிலை காரணமாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 3 விமானங்கள் மத்தள மஹிந்த ராஜபக்ஷ விமான நியைலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 5.20ற்கு டுபாயிலிருந்து வந்த விமானமொன்றும் , 5.49க்கு பெஜிங்கிலிருந்து வந்த விமானமொன்றும் , 6.03ற்கு டோஹாவிலிருந்து வந்த விமானமொன்றும் மத்தளையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பகுதியில் காலநிலை சீரடைந்த பின்னர் அந்த விமானங்கள் கட்டுநாயக்கவுக்கு சென்று தரையிரங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
R-06




