செய்திகள்

பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விண்ணப்ப புதிய நடைமுறை விபரங்கள்

பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதில் புதிய விண்ணப்ப நடைமுறையினை நுழைவுகள் மற்றும் குடிவரவுக்கான பிரித்தானிய அலுவலகம் (UKVI) 2017 சனவரி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய நுழைவு அனுமதி (visa) விண்ணப்ப நிலையங்களில் இருந்து பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிப்பதற்காக விண்ணப்பிப்பவர்கள் 12 திசெம்பர் 2016 முதல் தமது விண்ணப்பத்துடன் தொடர்பான ஆவணங்களை UKVI, PO Box 5852, Sheffield, S11 0FX என்ற முகவரிக்கு குறிப்பிடட விண்ணப்பதாரியின் முகவரால் அல்லது விண்ணப்பதாரியை வரவளைப்பவரால் (Sponsor) விண்ணப்பம் சமர்ப்பித்து 20 நாட்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்பது புதிய நடை முறையாகும். 30 சனவரி 2017 முதல் நிரந்தரமாக வசிப்பதற்கான விண்ணப்பத்துடன் தொடர்புடைய ஆவணங்கள் நுழைவு அனுமதி (visa) விண்ணப்ப நிலையங்களில் (visa application centres) ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

விண்ணப்பதாரி தமது விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தினத்தில் இணைய (online) விண்ணப்பத்தின் பிரதி மற்றும் கடவுச் சீட்டினை மட்டும் கொண்டு சென்று நுழைவு அனுமதி (visa) விண்ணப்ப நிலையத்தில் சமர்ப்பித்தால் போதுமானது. அவர்கள் விண்ணப்பதாரியின் புகைப்படம் மற்றும் கையடையாளங்களை பெற்ற பின்னர் கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்டு இணைய  (online) விண்ணப்பத்தின் பிரதியை மீண்டும் விண்ணப்பதாரியிடம் ஒப்படைப்பார்கள்.

விண்ணப்பதாரி தமது கையெழுத்திடப்பட்ட இணைய (online) விண்ணப்பத்தின் பிரதியுடன் ஏனைய விண்ணப்பத்துடன் தொடர்பான ஆவணங்களையும் இணைத்து தமது பிரித்தானியாவிலுள்ள முகவருக்கு அல்லது வரவளைப்பவருக்கு (Sponsor) காலதாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும். அவர்கள் அதனை வரவளைப்பவருடைய (Sponsor) ஆவணங்களின் மூல பிரதிகளுடன் சேர்த்து UKVI, PO Box 5852, Sheffield, S11 0FX என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அனைத்தது மூல பிரதிகளும் இலத்திரனியல் பிரதி (scan) செய்யப்பட்ட பின்னர் இரண்டு வாரங்களுக்குள் மீளவும் முகவருக்கோ அல்லது வரவளைப்பவருக்கோ (Sponsor) திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

அதன் பின்னர் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு முடிவு எட்டப்பட்ட பின்னர் விண்ணப்பதாரி தமது கடவுச்சீட்டினை குறிப்பிட்ட நுழைவு அனுமதி (visa) விண்ணப்ப நிலையத்திற்கு வந்து சேகரிக்கும்படி அறிவுறுத்தப்படுவார்கள். நிரந்தர வதிவுரிமைக்கான விண்ணப்ப பரிசீலனைக்கலாம் சாதாரணமாக 60 வேலை நாட்களாகும்.

தமது வாழ்க்கை துணையுடன் இணைந்து பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கு விண்ணப்பிபோர் (Spouse), தங்கிவாழும் பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் (Depending Parents, Children, Grandchildren) மற்றும் நிரந்தர வதிவுரிமையுடன் பிரித்தானியாவிற்கு மீள திரும்புவோர் (Returning Residence) இந்த புதிய நடைமுறையினை கவனத்தில் கொண்டு செயற்படவேண்டும்.

எனினும் குறுகியகால வரவு அனுமதி (visit visa) பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்ப நடைமுறையிலோ அல்லது பரிசீலனை நடைமுறையிலோ எந்த மாற்றமும் இல்லை.

மேலதிக விபரங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு:

DAVID BENSON SOLICITORS
28 MERTON HIGH STREET
LONDON
SW19 1DN
TP: 0208 540 8888
Fax: 0870 120 8384
Email: info@davidbensonsolicitors.co.uk